top of page

ஒத்தகெ பழங்குடியினர் ஆராய்ச்சி மையம்: உள்ளே புகுந்த திருடன்

  • Writer: Revanth Rajendran
    Revanth Rajendran
  • Aug 17
  • 3 min read

திருட்டு மூன்று வகைப்படும் 

1. யாருக்கும் தெரியாமல் செல்வத்தை கவர்ந்து செல்வது 

2. பட்டப்பகலில் அனைவரது கண் முன்னே செல்வத்தை கவர்ந்து செல்வது 


இது இரண்டில்லாமல் மூன்றாவது வகை திருட்டு தான் ஒத்தகெ பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தில் நடந்துள்ளது. 


அதாவது ஒருவரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, பின் நான் பணம் வாங்கவே இல்லை என்று பொய் சொல்லும் ரகம். 


தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுகிறது பழங்குடியினர் ஆராய்ச்சி மையம். முத்தோரை பாலாடாவில் அமைந்துள்ள இந்த மையம், பழங்குடிகள் சார்ந்த ஆராய்ச்சி, மற்றும் அவர்களுக்கான மேம்பாட்டு திட்டங்களை வகுத்து செயல்படுத்தும் முக்கிய பொறுப்பு கொண்டுள்ளது. அமைச்சர், பழங்குடியினர் நலத்துறை செயலாளர், இயக்குனர், நீலகிரி ஆட்சியர், மையத்தின் இயக்குனர் என அனைவருக்கும் இந்த பொறுப்பில் பங்குள்ளது. 


மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த அமைப்பு மத்திய அரசின் கணிசமான நிதியை பெற்று சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வரும். பல கட்டமைப்பு வசதிகள், பழங்குடிகள் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்துதல், பழங்குடிகளுக்கான திறன் மேம்பாடு, பழங்குடிகளின் பண்பாட்டு விழிப்புணர்வு, கலாச்சார விழிப்புணர்வு சுற்றுலாக்கள் ஆகிய செயல்பாடுகளை முன்னெடுக்கவே இந்த பழங்குடிகள் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. 


பழங்குடிகளுக்கான உன்னத அமைப்பில் திருடன் புகுந்ததே அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கும் செய்தி. 


பழங்குடிகளின் நலனுக்காக, ஆராய்ச்சி மையங்கள் மூலம் ' Support to TRI' என்ற திட்டத்தின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளில் ₹4.60 கோடியை, தமிழ் நாடு பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்திற்கு வழங்கி உள்ளது மத்திய அரசு. 



இந்திய அரசு, பழங்குடியினர் நல அமைச்சகம் வழங்கிய நிதி 

ஆண்டு

தொகை 

2021 - 2022 

₹135.09 லட்சம் 

2022 - 2023 

-

2023 - 2024

₹25 லட்சம் 

2024 - 2025

₹300 லட்சம் 

மொத்தம் 

₹460.09 லட்சம் 


தமிழ்நாடு அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையும், பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்திற்கான அன்றாட செலவு மற்றும் நல திட்டங்கள் செயல்பாட்டிற்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் ₹1.64 கோடி வழங்கியுள்ளது.



தமிழ்நாடு அரசு,  வழங்கிய நிதி 

ஆண்டு

தொகை 

2021 - 2022 

₹35.86 லட்சம் 

2022 - 2023 

₹45.19 லட்சம் 

2023 - 2024

₹40.86 லட்சம் 

2024 - 2025

₹42.43 லட்சம் 

மொத்தம் 

₹164.04 லட்சம் 


குறிப்பாக மத்திய அரசு வழங்கிய நிதியை தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக,  தமிழ்நாடு அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உறுதிப்படுத்துகிறது. 

ree

ஆனால் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பதிலுக்கு நேர்மறையாக, அதிர்ச்சியளிக்கும் வகையில், பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் தகவல் அளித்துள்ளது. 


தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக, ஒத்தகெ பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தால் மேற்கொள்ளப்பட்ட  முன்னெடுப்புகள் குறித்த விபரம் கேட்கப்பட்டதற்கு, கடந்த ஐந்து ஆண்டுகளாக மத்திய அரசிடமிருந்து எந்த நிதியும் பெறப்படவில்லை ஆகையால் ஆராய்ச்சி மையத்தால் பழங்குடியினர் நலனுக்காக எந்த ஒரு முன்னெடுப்பும் செய்யவில்லை என பதிலளித்துள்ளது, ஆராய்ச்சி மையம். 

ree

மத்திய அரசு கடந்த ஐந்தாண்டுகளில் ₹4.60 கோடி நிதி வழங்கியுள்ள நிலையில், ஒரு ரூபாய் கூட பெறப்படவில்லை ஆகையால் எந்த பணியும் செய்யவில்லை என்று பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் கூறுவது அபத்தமாக உள்ளது. 


குறிப்பாக தமிழக பழங்குடியினர் நலத்துறையும் மத்திய அரசு வழங்கிய நிதியை உறுதி செய்யும் நிலையில், ஒத்தகெ பழங்குடியினர்  ஆராய்ச்சி மையம் தேர்ந்தெடுத்து பொய் சொல்லியிருக்கிறது என்பது தெளிவாகிறது. 


‘Support to TRI’ திட்டத்தின் கீழ், மத்திய அரசிடமிருந்து நிதி பெற குறிப்பிட்ட வழிமுறைகள் உள்ளது. அதன் படி சம்மந்தப்பட்ட மாநில அரசு, அதாவது அம்மாநிலத்தின் பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனம் அவ்வாண்டிற்கான செயல்திட்டத்தை (Annual Action Plan) வகுத்து சமர்ப்பிக்க வேண்டும்.  

ree

அத்திட்டங்கள் மத்திய பழங்குடியினர் நலத்துறை செயலாளர் தலைமையில் விவாதிக்கப்பட்டு பின் ஒப்புதல் அளிக்கப்படும். முறையே அத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நிதி ஒதுக்கப்படும். இவ்வாறு தான் கடந்த 2021 முதல் 2025 வரை ₹4.6 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்ற நிதி ஆண்டில் மட்டும் (2024 - 2025) ₹3 கோடி நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இத்தனை நிதியை பெற்றுக்கொண்டு, மத்திய அரசிடமிருந்து நிதியே பெறப்படவில்லை என கூறுவது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 


பழங்குடியினர் நலனுக்காக வேலை செய்யத்தான் இந்த ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது. அவ்வேலைகளை பொறுப்போடு செய்ய தவறவிட்டு அரசியல் கட்சி போன்ற மனப்பான்மையை கொண்டுள்ளது ஒத்தகெ பழங்குடியினர் ஆராய்ச்சி மையம். 


வேலையே செய்யாமல், கோடிகளை கொள்ளையடித்துவிட்டு, ஏன் வேலை செய்யவில்லை என்று கேட்டால், மத்திய அரசு நிதி தரவில்லை என்று வாய்கூசாமல் பொய் சொல்லும் நோய், மாடல் அரசின் அனைத்து நிலைகளுக்கும் பரவி இருக்கிறது என்பதற்கு ஒத்தகெ பழங்குடியினர் ஆராய்ச்சி மையமே சாட்சி. 


ஒரு அரசில் ஒரே துறையிடமிருந்து இரண்டு வேறு பதில்கள் எதிர்மறையாக வந்திருப்பது சர்சைக்குரியது. மேலும் இது பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் என்ற பெயரில் பல முறைகேடுகள் சத்தமில்லாமல் நடப்பதை உறுதிசெய்கிறது. 


உண்மையில் மத்திய அரசு நிதி தரவில்லையா? மாநில அரசு அந்நிதியை முறையே பயன்படுத்தவில்லையா? அல்லது ஒத்தகெ பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தில் திருடன் உதயமாகிருக்கிறானா என்பது உரிய விசாரணை மூலமே தெரியவரும். 


மொத்தத்தில் பழங்குடியினருக்கு உரிய நலன் தடுக்கப்பட்டுள்ளது. மேலும் பூர்வகுடி படக மக்களின் உரிமை மீட்பு சார்ந்த பணிகளும் பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தில் தான் முன்னெடுக்கப்படாமல் தூசி படிந்து கொண்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமான பணிகள் இருக்கும் வேளையில் ஒத்தகெ பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தில் பண விளையாட்டு நடப்பது தற்போது அம்பலமாகிருக்கிறது. 


Comments


Project Betta

  • Instagram
  • Facebook
  • YouTube
  • X
  • LinkedIn
  • Whatsapp
  • Whatsapp

Join the
Betta Channel.
Get instant updates!

Thanks for subscribing!

bottom of page