ஒன்றிணைவோம் மஞ்சூரில் - சில்ஹல்லா பாதுகாப்பு இயக்கம்
- Betta
- Mar 28
- 1 min read
நீலமலை தேச மக்களுக்கு வணக்கம்.
நீலகிரி உயிர்கோளக் காப்பகம் என்னும் பெயருக்கு உகந்தவாறே, மனிதர்கள் மட்டும் இன்றி பல்லாயிரம் உயிர்களுக்கு வாழ்விடமாய் வாழ்வாதாரமாய் திகழ்ந்து வருகிறது நமது நீலகிரி மலை தேசம்.
இம்மலைகளின் மேன்மையை உணர்ந்தே பல்லாயிரம் ஆண்டுகளாக இக்குறிஞ்சி நிலப்பரப்பின் நிலைத்தன்மை மாறாமல் பூர்வகுடிகளும், பழங்குடிகளும், மற்றும் இந்த மண்ணின் மீது அன்பு கொண்ட அனைத்து மக்களும், இதனை காத்து வந்துள்ளோம். ஆனால் இந்த உயிர்கோளக் காப்பகத்தை வெறுமனே வணிகமாக பார்த்து பல அரசுகள் நீலகிரி மலைகளை அழித்து வந்துள்ளன. ஏற்கனவே நீர் தேவைக்கும் மின்சார உற்பத்திக்கும் பல ஆயிரம் ஏக்கர் வனத்தையும் பல கிராமங்களையும் அழித்து, மென்மையான மண் என்று கூட பாராமல் இருபதிற்கும் மேற்பட்ட அணைகளை கட்டியுள்ளனர்.
இதற்க்கு மேல் இந்த பூமி தாங்காது என்ற நிலையிலும் சில்ஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் என்னும் பெயரில் இரண்டு அணைகள், அவற்றை இணைக்க 15 கிலோமீட்டர் தூரத்திற்கு சுரங்கம், ராட்சத குழாய்கள் என அழிவுக்கு மேல் பேரழிவை நம்மிடத்தில் கொண்டுவர முயல்கிறார்கள்.
அணை வடிவில் வரும் இந்த அழிவை நாம் தடுத்திட வேண்டும்.
25 கிராமங்களை காக்க
விவசாய நிலத்தை காக்க
பல்லாயிரம் ஏக்கர் வனத்தை காக்க
வனஉயிர்களின் வாழ்விடத்தை காக்க
பூர்வகுடி அடையாளத்தை காக்க
பல ஆண்டுகளுக்கு முன்பு கெத்தையில் 40 பேரை பலிகொடுத்த நிலச்சரிவு போல, கேரளா மாநிலம் மேப்பாடியில் பலநூறு உயிர்களை பலிகொடுத்த நிலச்சரிவு போல, நீலகிரியில் நடக்காமல் தடுத்திட.
ஒன்றிணைவோம்
சில்ஹல்லா பாதுகாப்பு இயக்கம்
விழுப்புணர்வு பொதுக்கூட்டம்
இடம்: மஞ்சூர் சக்தி மாரியம்மன் கோவில் முன்பு
நாள்: 30-03-2025
ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10 மணி
மேற்குநாடு குந்தே சீமை அழிவிலிருந்து காக்க.
நீலகிரியை காக்க.
அனைவரும் வாரீர். அணையை எதிர்ப்போம் அழிவை தடுப்போம்
Comments